search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைத்துக் கட்சி"

    பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தற்போது சாத்தியம் இல்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார். #ChiefElectionCommissioner #parliament #election
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார்.

    அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

    இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு சட்ட ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, வரும் 7ம் தேதி மற்றும் 8-ம் தேதி அனைத்துக் கட்சி பிரநிதிகளிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பார்வையற்றோருக்கான பிரெய்லி வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார். 

    அப்போது அவரிடம் பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவது குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையர், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்டத்தில் இடமில்லை; சட்டத்திருத்தம் கொண்டு வந்தால்தான் இது சாத்தியம் எனக் கூறினார்.

    அரசியலமைப்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளின் படி தேர்தல் ஆணையம் செயல்படும். எனவே, தற்போதைய நிலையில் தேர்தலை தொடர்ந்து நடத்துவோம் என்றும் தேர்தல் ஆணையர் கூறினார்.  #ChiefElectionCommissioner #parliament #election
    ×